Wednesday, September 14, 2011

சுலபமான ஒரு இனிப்பு

கோதுமை மாவை நெய்யில் பொன் வறுவலாகவறுத்துக் கொண்டு பால்+ தண்ணீர்( அல்லது முழு பால்) விட்டு வேக விட்டு சர்க்கரை தேவையான அளவு சேர்த்து நன்றாகசுருள வரும்போது அடுப்பில் இருந்து இறக்க வேண்டும் . இப்போது சுவையான சுலபமான கோதுமை அல்வா தயார் .விருந்தினர் வந்தால் சீக்கிரமாக செய்யலாம் .
ஊற வைத்து அரைத்து ,கிண்டி,கிளறி கஷ்ட படாமல் செய்யலாம். ஆனால் சுவையில்
நன்றாகவே இருக்கும்