Friday, January 3, 2014

Cauliflower manchurian

காலி பிளவர்மஞ்சுரியன் :

.  போன வாரம் காலி பிளவர்  வாங்கி வந்து செய்தேன். இப்ப தான்  பூ சீசனாச்சே காலி பிளவர்  பூச்சி  புழு இல்லாமல் இருக்கும் , சீசனில் வரும் காய் எப்பவுமே  நல்ல  ருசியோடு  இருக்கும்,ஹோட்டலுக்கு  போனால் எல்லாரும்  விரும்பி சாப்பிடறது  இது தானே . அங்கெல்லாம்  food  கலர்  சேர்ப்பார்கள் . நம் வீட்டிலே செய்தால்  கலர் சேர்க்காமல் சுகாதார  முறையில்  ருசி குறையாமல் செய்யலாம்
காலி பிளவர்மஞ்சுரியன் :
 தேவை யான பொருட்கள் :
 காலிபிளவர் - 1 பெரியது
 சோள மாவு -1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
 இஞ்சி பூண்டு விழுது -1/4 ஸ்பூன்
 உப்பு - ருசிக்கேற்ப
சாஸ்  செய்ய :
வெங்காயம் -1 ஸ்பூன்  நறுக்கியது
குடமிளகாய் = 1 ஸ்பூன் நறுக்கியது
பூண்டு -2 ஸ்பூன்  நறுக்கியது
 இஞ்சி -  1 ஸ்பூன் நறுக்கியது
சோயா சாஸ் - 3/4 ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
தக்காளி கெட்ச்சப் -1/2 ஸ்பூன்
எண்ணெய்- பொரிக்க
உப்பு - ருசிக்கேற்ப
வெங்காயத்தாள் - அலங்கரிக்க
 கொத்தமல்லி - அலங்கரிக்க
செய்முறை:
பூவை வெந்நீரில் 15 நிமிடங்கள் போட்டு  , பிறகு வடிய விடவும்
ஒரு பௌலில் அரிசி மாவு + சோள மாவு  + உப்பு சேர்த்து கலக்கவும். அதனுடன்
இஞ்சி , பூண்டு விழுது  சேர்த்து ( விருப்ப பட்டால் ) லேசாக தண்ணீர்  தெளித்து  கெட்டி  மாவாக கலக்கவும் , அதில்  காலிபிளவரை  போட்டு  எல்லா பக்கமும்  படும்படி நன்றாக  முழுகும்படி வைக்கவும்.
ஒரு வாணலியில்  எண்ணெய் விட்டு அந்த  பூக்களை பொன்னிறமாக பொரித்து எடுக்கணும்.
ஒரு tissue பேப்பரில் அதிகப்படி எண்ணெய் உறிஞ்சும்படி பொரித்த பூக்களை பேப்பரில் வடிய விடவும்.
மற்றொரு  வாணலியில்  கொஞ்சம் எண்ணெய் வைத்து நறுக்கிய இஞ்சி , பூண்டு  போட்டு வதக்கி நறுக்கிய வெங்காயம்   , குடமிளகாய் சேர்த்து வதக்கி , பிறகு  சாஸ்   வகைகளை சேர்த்து  தக்காளி கெச்சப்பும் சேர்த்து நன்றாக கலந்து கொஞ்சம் வதக்கி  உப்பும் சேர்க்கவும்.
பிறகு  பொரித்த காலிபிளவரை சேர்த்து நன்றாக  எல்லாபக்கமும்  விழுது படும்படியாக கலந்து ( நன்றாக coat  ஆகும்படி கலந்து ) அடுப்பிலிருந்து இறக்கி , கொத்தமல்லி , வெங்காய தாள்  தூவி அலங்கரிக்கவும்.  காலிபிளவர் மஞ்சூரியன்  ரெடி


No comments:

Post a Comment