Saturday, October 27, 2012

காரட் ஹல்வா :::
தேவையான பொருட்கள்
காரட் --3 கப்
  பால் --    1  1 /2 கப்
ச ர்க்கரை - 1     கப்
நெய் -  3  டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் ..சிறிதளவு
முந்திரி -சிறிதளவு
 ஒரு அடி கனமான வாணலியில் துருவிய காரட்டை சிறிது நெய் விட்டு வதக்கி ,அதனுடன் பால் சேர்த்து வேகவிடவும் .நன்றாக வெந்து பால் சுண்டியதும்  சர்க்கரை
சேர்க்கவும் கை விடாமல் கிளறவும் ,கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு கிளறவும் .நன்றாக சேர்ந்து வந்ததும் , நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்    











 

Friday, October 26, 2012

பூசணிக்காய் ஹல்வா :

அடுத்து ஒரு இனிப்பு ....  பூசணிக்காய் ஹல்வா :
கல்யாணங்களில் மாப்பிள்ளை அழைப்பு  அன்று மாலை சிற்றுண்டிக்கு அநேகமாக பூசனிக்காய் ஹல்வா தான் போடுவார்கள்:
நாமும் இதை ஈசியாக வீட்டில் செய்யலாம் ;
வெள்ளை பூசணிக்காய் வாங்கி நன்றாக சுத்தம் செய்து,தோலி,நடுவில் உள்ள பாகத்தையும் நறுக்கி விட்டு கெட்டியான சதை பகுதியை காரட்   துருவலில்

துருவி நன்றாக பிழிந்து தண்ணீரை வடிகட்டி  விடவும்
.
வாணலியை அடுப்பில் ஏற்றி இரண்டு/மூன்று தேக்கரண்டி நெய் விட்டு பிழிந்த பூசணிக்காயை போட்டு வதக்கவும்.
நன்றாக வதகியதும் ,தண்ணீர் சுண்டியதும் விழுதுக்கு முக்கால் அளவு சக்கரை + பாதி அளவு பால் சேர்த்து வேக விடவும்,சேர்ந்து வெந்ததும் கொஞ்சம் கேசரி பவுடர்,ஏலக்காய்  பவுடர் சேர்த்து
கிளறி வாணலியில் ஒட்டாமல் வந்ததும் வாணலியில் இருந்து இறக்கிவிடவும்,இது தளதளவென்றிருக்க வேண்டும் .கெட்டி ஆகக்கூடாது.
சூப்பர் பூசணிக்காய் ஹல்வா ரெடி ,