ரொம்ப நாள் ஆச்சு blog பக்கம் வந்து , இனி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.
இன்னைக்கு வித்தியாசமாக ....மிளகு குழம்பு ::
எப்பவும் செய்வது தான் இருந்தாலும் நெறைய பேரிடமிருந்து appreciation , recognition கிடைத்தல் ஒரு சந்தோசம் தானே .சரி தேவையான பொருட்கள்,முறை தருகிறேன் நீங்களும் செய்து பாத்து சொல்லுங்கள்.
தேவையான பொருட்கள் :
மிளகு : 1 டீஸ்பூன்
கடலை பருப்பு :1 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் : 6
துவரம் பருப்பு : 1 டீஸ்பூன்
ஜீரகம் :1/2 டீஸ்பூன்
தனியா/கொத்துமல்லி விதை : 2 டீஸ்பூன்
கட்டி பெருங்காயம் ;சிறிய துண்டம் /இல்லாவிடில் பெருங்காய தூள்
கருவேப்பிலை : 1 ஆர்க்கு
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணெய் : நல்லெண்ணெய் உபயோகிக்கவும்
புளி :ஒரு எலுமிச்சங்காய் அளவு
மணத்தக்காளி வத்தல் - 2 டீஸ்பூன்
செய்முறை :
வாணலியை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் சிறிது ஊற்றி ,புளி , உப்பு,மணத்தக்காளி வத்தல் நீங்கலாக எல்லாவற்றையும் லேசாக பொன்னிறமாக வறுத்து mixie இல் புளியுடன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும் .
அடுப்பில் அதே வாணலியை ஏற்றி ,3 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி ,கடுகு,ஜீரகம் ,ஒரு ஆர்க்கு கருவேப்பிலை கொத்து ,தாளித்து மணத்தக்காளி வத்தல் சேர்த்து பொரிந்ததும் அரைத்து விழுதை நீர்க்க கரைத்து , தேவையான உப்பும் கொஞ்சம் மஞ்சள் பொடியும் போட்டு கொதிக்க விடவும்.நன்றாக கொதித்து சேர்ந்த மாதிரி consistancy வந்ததும்
மேலாக கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
இந்த குழம்பு ரெண்டு / மூன்று நாளைக்கு நன்றாக இருக்கும்.(fridge இல் வைத்தால் ஒரு வாரம் கூட நன்றாக இருக்கும் )
தோசை, சப்பாத்தி இட்லி ,தயிர் சாதத்துடன் சைடு dish ஆக சாப்பிடலாம் .
சூடான சாதத்துடன் கொஞ்சம் மிளகு குழம்பு சேர்த்து பிசைந்து , சுட்ட அப்பளம் . அவியல் ,டாங்கர் பச்சிடி ,நல்ல கெட்டி தயிர் இவைகளுடன் சாப்பிட்டால் அமிர்தம் போல இருக்கும் .
No comments:
Post a Comment