Tuesday, November 26, 2013

vaththa kuzhambu sadham #OPOS





cooker  ரிலே  நேரடியாக  வத்த குழம்பு சாதம் செய்தால்  சௌகர்யமாக  சீக்கிரமே சமையல் முடிந்து சாப்பிடலாம் , அதற்கான செய்முறை இதோ ::


அரிசி = 1/2  கப்
 புளி தண்ணீர் - ஒரு நெல்லிக்காய் அளவு புளி  கரைத்தது + தண்ணீர் = 2 கப்
 சாம்பார் பவுடர் -  1 1/2 டீஸ்பூன்
 உப்பு - தேவைகேற்ப
தாளிக்க :
நல்லெண்ணெய் -  3 டீஸ்பூன்
 கடுகு - 1 டீஸ்பூன்
 துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
 வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
 பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி
 கருவேப்பிலை - 10 இலைகள்
மனத்தக்காளி வத்தல் - 1 டீஸ்பூன்
அப்பளம் - ( பிடித்தவர்கள் சேர்க்கலாம் - 1 உளுத்த அப்பளம் )
செய்முறை :
 அடுப்பில்  cookeril  நல்லெண்ணெய்  ஊற்றி  தாளிக்கும்  items  வரிசையாக சேர்த்து , தாளித்து  புளி தண்ணீர் +தண்ணீர் (மொத்தம்  2 கப்) சேர்த்து  சாம்பார் பொடி , உப்பு ,அரிசி சேர்த்து ஒரு கலக்கு கலக்கி  cookerai  whistle  வைத்து மூடி  6  whistle  வந்தது அணைத்துவிடவும்
 steam  அடங்கியதும்  திறந்து   சாப்பிடவேண்டியது தான் . அட்டகாசமான  வத்த குழம்பு சாதம் ரெடி . தொட்டுக்க , சுட்ட அப்பளம்,  கூட்டு , தேங்காய் போட்ட curry  சிறந்ததாக அமையும் .
 மத்யான  லஞ்ச்  packing , tour  lunch  packing  சூப்பர்  item

No comments:

Post a Comment