Saturday, November 30, 2013

Rava kesari # OPOS

சுலபமான  சீக்கிரமா செய்யற  ரவா கேசரி ::
 தேவையான பொருட்கள் "
 ரவா = 1 கப்
 சக்கரை-2 கப்
தண்ணீர் - 3 கப்
நெய் - 1/2 கப்
முந்திரி பருப்பு - 10 பருப்பு
ஏலக்காய்  பவுடர்- சிறிதளவு
கேசரி கலர் = சிறிதளவு
பச்சகல்பூரம் - _ (optional )
செய்முறை ::
குக்கெரில், ரவையையும்  முந்திரி பருப்பையும் சேர்த்து நெய் சேர்த்து,  முந்திரி பருப்பு லேசாக பொன்னிறம் வரும் வரை  வறுக்கவும். அதற்கிடையில்  மற்றொரு  பாத்திரத்தில்  2 கப்  சர்க்கரை ,3 கப் தண்ணீரை சேர்த்து ஒன்றாக  கரையவிட்டு கொதிக்க விடவும்.ரவை  வறுபட்டதும்  சர்க்கரை +தண்ணீர்  கலவையை  விட்டு கேசரி கலரும் ஏலக்காய் பவுடர்  போட்டு கைவிடாமல்  கிளறி  குக்கர்  மூடி போட்டு மூடி  வெயிட்  போட்டு  அடுப்பை அணைத்து விடவும்.பிறகு 15 நிமிடங்கள் கழித்து  திறந்து பார்த்தால்,   கட்டி தட்டாத  அருமையான  கலருடன்  ருசியான  கேசரி தயாராக  இருக்கும்.  கிளரிண்டே பக்கத்தில் நிற்கவேண்டாம் .
 நீங்களும் செய்து பார்த்து  எனக்கு சொல்லுங்கள் எப்படி இருந்ததுன்னு !!!

Tuesday, November 26, 2013

Rasam sadham direct in COOKER # OPOS

 COOKER  இல்  நேரடியாக  செய்த ரசம் சாதம்






தேவையான பொருட்கள்:
1)அரிசி - 3/ 4 கப்
2)துவரம் பருப்பு - 2 ஸ்பூன்

3)பயத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
4)புளி - ஒரு நெல்லிக்காய் அளவு (தண்ணீரில் ஒரு போட்டு கரைத்து வைத்துக்கவும்)
5)சாம்பார் பொடி-1 1/2 டீஸ்பூன் ( நான் ரச பொடி தனியாக உபயோகிப்பதில்லை )
6)உப்பு - தேவைக்கேற்ப
7)பெருங்காயம் - சிறிய துண்டு
8)தண்ணீர் - 3 - 3 1/2 கப் ( புளி தண்ணீரும் சேர்த்து)
9)தக்காளி - 1 (பெரியது ) / 2 (சிறியது ) பொடி பொடியாக நறுக்கியது
தாளிக்க :
நெய் +எண்ணெய் = 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
ஜீரகம் - 1/2 ஸ்பூன்
மிளகு பொடி - 1/4 ஸ்பூன்
கருவேப்பிலை -கொஞ்சம்
கொத்துமல்லி மேலாக தூவ
செய் முறை : cookeril (1 )- (9) வரை எல்லாத்தையும் போட்டு மூடி போட்டு weightum போடவும் . 4 , 5 whistle வந்ததும் அடுப்பை off செய்து விட்டு , steam அடங்கிய பிறகு cookerai திறந்து நன்றாக கரண்டியால் மசித்து விடவும் .
வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சம் நெய் + எண்ணெய் ( முழுவதும்
நெய்யும் விடலாம்) விட்டு கடுகு , ஜீரகம் , கருவேப்பிலை , மிளகு தூள் தாளித்து சாதத்தின் மேல் போட்டு கொத்துமல்லி தூவி மணமான ருசியான ரசம் சாதத்தை எல்லாருடனும் சேர்ந்து சாப்பிடலாம்.
Side dish : அப்பளம் , கருவடாம் poriththathu , thayir pachchadi , daangar pachchadi



1. Rice – ¾ cup

2. Thuvaramparuppu – 2 tea spoon ,

3.Payaththam paruppu – 1 teaspoon

4. Sambar powder - 1 ½ teaspoon ( as I am using not any rasam powder )

5.Salt – as required

6.Tamarind - 1 gooseberry size ( soak it in water and take the extract)

7.Water - 3 to 3 ½ cup ( including tamarind water)

8.Tomato - 1 (big size) / 2 (small size) [ cut it into small pieces]

9.Asafoetida - 1 small piece(fry and powder it and use )

For seasoning :

Oil / ghee – 2 teaspoon( some use each 1 teaspoon) Kadugu – 1 teaspoon
Jeeragam – 12 teaspoon

Pepper powder (coarsely grinded) – ¼ teaspoon

Curry leaves - 6 to 7

Fresh koththumalli leaves for garnishing

Method:

Add all the ingredients 1 to 9 in the PC ON the gas cover with lid and put the whistle . Allow to whistle upto 4 to 5 . switch off the stove . Allow to cool . Then open the lid and smash the rice with ladle. Do the seasoning and put it on the rasam rice garnish with fresh dhania leaves.

If it is served for children add one more spoon of ghee .

Enjoy the rasam rice with fried vadaams , pappad / fried veg s .

I got  prize  for this recipe from a  Facebook  group UBF (actually   first lady to get  the prize for #OPOS ) A  pressure cooker .

vaththa kuzhambu sadham #OPOS





cooker  ரிலே  நேரடியாக  வத்த குழம்பு சாதம் செய்தால்  சௌகர்யமாக  சீக்கிரமே சமையல் முடிந்து சாப்பிடலாம் , அதற்கான செய்முறை இதோ ::


அரிசி = 1/2  கப்
 புளி தண்ணீர் - ஒரு நெல்லிக்காய் அளவு புளி  கரைத்தது + தண்ணீர் = 2 கப்
 சாம்பார் பவுடர் -  1 1/2 டீஸ்பூன்
 உப்பு - தேவைகேற்ப
தாளிக்க :
நல்லெண்ணெய் -  3 டீஸ்பூன்
 கடுகு - 1 டீஸ்பூன்
 துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
 வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
 பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி
 கருவேப்பிலை - 10 இலைகள்
மனத்தக்காளி வத்தல் - 1 டீஸ்பூன்
அப்பளம் - ( பிடித்தவர்கள் சேர்க்கலாம் - 1 உளுத்த அப்பளம் )
செய்முறை :
 அடுப்பில்  cookeril  நல்லெண்ணெய்  ஊற்றி  தாளிக்கும்  items  வரிசையாக சேர்த்து , தாளித்து  புளி தண்ணீர் +தண்ணீர் (மொத்தம்  2 கப்) சேர்த்து  சாம்பார் பொடி , உப்பு ,அரிசி சேர்த்து ஒரு கலக்கு கலக்கி  cookerai  whistle  வைத்து மூடி  6  whistle  வந்தது அணைத்துவிடவும்
 steam  அடங்கியதும்  திறந்து   சாப்பிடவேண்டியது தான் . அட்டகாசமான  வத்த குழம்பு சாதம் ரெடி . தொட்டுக்க , சுட்ட அப்பளம்,  கூட்டு , தேங்காய் போட்ட curry  சிறந்ததாக அமையும் .
 மத்யான  லஞ்ச்  packing , tour  lunch  packing  சூப்பர்  item

Sunday, April 28, 2013

Milagu kuzhambu

ரொம்ப நாள் ஆச்சு blog பக்கம் வந்து , இனி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.

இன்னைக்கு வித்தியாசமாக ....மிளகு குழம்பு ::

 எப்பவும் செய்வது தான் இருந்தாலும்  நெறைய பேரிடமிருந்து appreciation , recognition கிடைத்தல்  ஒரு சந்தோசம் தானே .சரி  தேவையான பொருட்கள்,முறை தருகிறேன்  நீங்களும் செய்து பாத்து சொல்லுங்கள்.

தேவையான  பொருட்கள் :
மிளகு                : 1 டீஸ்பூன்
கடலை பருப்பு :1 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் : 6
துவரம் பருப்பு  :  1 டீஸ்பூன்
ஜீரகம் :1/2 டீஸ்பூன்
தனியா/கொத்துமல்லி விதை : 2 டீஸ்பூன்
கட்டி பெருங்காயம் ;சிறிய துண்டம் /இல்லாவிடில் பெருங்காய தூள்
கருவேப்பிலை : 1 ஆர்க்கு
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணெய் : நல்லெண்ணெய் உபயோகிக்கவும்
புளி :ஒரு எலுமிச்சங்காய்  அளவு
மணத்தக்காளி  வத்தல் - 2 டீஸ்பூன் 
செய்முறை :
    வாணலியை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் சிறிது ஊற்றி ,புளி , உப்பு,மணத்தக்காளி வத்தல்  நீங்கலாக எல்லாவற்றையும் லேசாக பொன்னிறமாக வறுத்து mixie இல் புளியுடன்  சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும் .
அடுப்பில் அதே வாணலியை ஏற்றி ,3 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி ,கடுகு,ஜீரகம் ,ஒரு ஆர்க்கு கருவேப்பிலை கொத்து ,தாளித்து மணத்தக்காளி வத்தல் சேர்த்து பொரிந்ததும் அரைத்து விழுதை நீர்க்க கரைத்து , தேவையான உப்பும் கொஞ்சம் மஞ்சள் பொடியும் போட்டு  கொதிக்க விடவும்.நன்றாக கொதித்து சேர்ந்த மாதிரி consistancy வந்ததும்
மேலாக கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு  அடுப்பிலிருந்து  இறக்கி விடவும்.
இந்த குழம்பு ரெண்டு / மூன்று நாளைக்கு நன்றாக இருக்கும்.(fridge இல் வைத்தால் ஒரு வாரம் கூட நன்றாக இருக்கும் )
 தோசை, சப்பாத்தி இட்லி ,தயிர் சாதத்துடன் சைடு dish ஆக சாப்பிடலாம் .
சூடான சாதத்துடன் கொஞ்சம் மிளகு குழம்பு சேர்த்து பிசைந்து , சுட்ட அப்பளம் . அவியல் ,டாங்கர் பச்சிடி ,நல்ல கெட்டி தயிர் இவைகளுடன் சாப்பிட்டால் அமிர்தம் போல இருக்கும் .

Thursday, February 21, 2013

Goddu rasam

 We   prepare rasam daily  since  we are addict to rasam, daily   a variety  of rasam  will be prepared in  our house. This one is very  easy   and  tasty rasam :


 Ingredients :
Tamarind   -   1  small gooseberry size
Tomato - 1 
Rasa powder / sambar powder   - 1/2 tsp
 Salt - to taste
 hing  -little
Thur dal  - 1 tsp
 Garlic  - 2 pods (optional)
 Curry leaves, coriander leaves-  for garnishing
Red chillies  - 2
 Tempering :
 Kadugu - 1 tsp
 Method:
  In a vessel  pour the tamarind juice , add the  cut tomato, salt , rasam powder , hing, thur dal ( as it is -- not cooked  dal  ) , garlic ( optional ) and  cook  till the  raw smell of tamarind, rasam powder  vanishes .Add the required water   and allow to froth the rasam.Temper the kadugu , red chillies , curry leaves in ghee , Garnish with fresh  coriander leaves . This is  easy  and quick,  tasty rasam .










Lemon Rasam .


This is a  tangy , enjoyable rasam , you can drink as soup too. Whenever  we get fresh lemon , we   prepare lemon rice, lemon rasam , lemon juice ,,,,  wow   this  has   good medicinal property too .
Ingredients :
 Thur dal  - 1/4 cup
 Salt - to taste
 Tomato - 1
Lemon - 1
Hing-  1/2 tsp
Pepper-  1/4 tsp
Jeeragam - 1/4 tsp
Ginger -  a small piece
Green chilly -1,
Turmeric powder - 1/2 tsp
For tempering - ghee- 1 tsp, kadugu - 1/2 tsp

 Cook the dal , mash it and keep it aside,
In a vessel take   1 1/2 cup of water add chopped tomato, ginger, turmeric powder, salt  allow to boil for   10  minutes , then add the cooked , mashed  dal , add   1/2  a cup of water ,add pepper, jeera allow to froth . Then add the  tadka, , then add the  lemon juice and garnish with fresh coriander leaves, curry leaves , Yummy lemon rasam is ready







poricha rasam ( no tamarind rasam )

Our  favourite rasam ,  prepared  without tamarind, sometimes  doctors   advised  not to use tamarind during the medications , At that we use  poricha koottus , poricha rasam  for paththiyam . Even  after delivery also we use very  less ( some times   we use  roast  little tamarind   and use it / without tamarind  we use)
 Ingredients:
 Thur dal  -  2 tsp s( cook it in water and mash it)
 Tomato  - 1
 Salt  - to taste
 Rasam powder  - 1 tsp
 Hing   - little
Temper:
Kadugu  - 1 tsp
 Curry leaves, coriander leaves - for garnishing 




 Method :
 Cook the dal and mash it , keep it . In another vessel add water , tomato  cook it for 5 mins, then  remove the tomato , remove the skin and  mash it  add  2 cups of water , rasam powder , salt , hing  and boil it  for  10 minutes , then add the dal water cook for 2 minutes  and add the required  water and allow to froth . Then  temper kadugu  in ghee  add to the rasam , garnish with curry leaves, coriander leaves  and enjoy the poricha rasam with hot rice.

paruppu rasam

தேவையான பொருட்கள் :
----------------------------
துவரம் பருப்பு - 50கிராம்
ரசப்பொடி - 1 ஸ்பூன்
 புளி -2 கொட்டை பாக்கு அளவு         
தக்காளி பழம் -1 சிறியது
உப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயம் -1 துண்டு
கடுகு -1/4 ஸ்பூன் (தாளிக்க)
கொத்துமல்லி ,கருவேப்பிலை (அலங்கரிக்க)



முதலில் பருப்பை வேகவிட்டு நன்றாக குழைய வேகவைத்து கொள்ளவும்.புளியை ஊறவைத்து 200 கிராம் அளவு எடுத்து கொண்டு அதில் உப்பு ,பெருங்காயம்,நறுக்கிய தக்காளி ,ரசப்பொடி,இவற்றை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.சுமார் 8 நிமிடங்கள் நன்கு கொதித்ததும் வேக வைத்த பருப்பு தண்ணீருடன் சேர்த்து வேண்டிய அளவுக்கு தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்ததும் இறக்கி கருவேப்பிலை ,கொத்துமல்லி போட்டு அலங்கரித்து கடுகு தாளிக்கவும்  (நெய்யில் -optional )(சீரகமும் சேர்க்கலாம் -optional -வாசனையாக இருக்கும் )