Sunday, April 28, 2013

Milagu kuzhambu

ரொம்ப நாள் ஆச்சு blog பக்கம் வந்து , இனி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.

இன்னைக்கு வித்தியாசமாக ....மிளகு குழம்பு ::

 எப்பவும் செய்வது தான் இருந்தாலும்  நெறைய பேரிடமிருந்து appreciation , recognition கிடைத்தல்  ஒரு சந்தோசம் தானே .சரி  தேவையான பொருட்கள்,முறை தருகிறேன்  நீங்களும் செய்து பாத்து சொல்லுங்கள்.

தேவையான  பொருட்கள் :
மிளகு                : 1 டீஸ்பூன்
கடலை பருப்பு :1 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் : 6
துவரம் பருப்பு  :  1 டீஸ்பூன்
ஜீரகம் :1/2 டீஸ்பூன்
தனியா/கொத்துமல்லி விதை : 2 டீஸ்பூன்
கட்டி பெருங்காயம் ;சிறிய துண்டம் /இல்லாவிடில் பெருங்காய தூள்
கருவேப்பிலை : 1 ஆர்க்கு
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணெய் : நல்லெண்ணெய் உபயோகிக்கவும்
புளி :ஒரு எலுமிச்சங்காய்  அளவு
மணத்தக்காளி  வத்தல் - 2 டீஸ்பூன் 
செய்முறை :
    வாணலியை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் சிறிது ஊற்றி ,புளி , உப்பு,மணத்தக்காளி வத்தல்  நீங்கலாக எல்லாவற்றையும் லேசாக பொன்னிறமாக வறுத்து mixie இல் புளியுடன்  சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும் .
அடுப்பில் அதே வாணலியை ஏற்றி ,3 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி ,கடுகு,ஜீரகம் ,ஒரு ஆர்க்கு கருவேப்பிலை கொத்து ,தாளித்து மணத்தக்காளி வத்தல் சேர்த்து பொரிந்ததும் அரைத்து விழுதை நீர்க்க கரைத்து , தேவையான உப்பும் கொஞ்சம் மஞ்சள் பொடியும் போட்டு  கொதிக்க விடவும்.நன்றாக கொதித்து சேர்ந்த மாதிரி consistancy வந்ததும்
மேலாக கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு  அடுப்பிலிருந்து  இறக்கி விடவும்.
இந்த குழம்பு ரெண்டு / மூன்று நாளைக்கு நன்றாக இருக்கும்.(fridge இல் வைத்தால் ஒரு வாரம் கூட நன்றாக இருக்கும் )
 தோசை, சப்பாத்தி இட்லி ,தயிர் சாதத்துடன் சைடு dish ஆக சாப்பிடலாம் .
சூடான சாதத்துடன் கொஞ்சம் மிளகு குழம்பு சேர்த்து பிசைந்து , சுட்ட அப்பளம் . அவியல் ,டாங்கர் பச்சிடி ,நல்ல கெட்டி தயிர் இவைகளுடன் சாப்பிட்டால் அமிர்தம் போல இருக்கும் .

Thursday, February 21, 2013

Goddu rasam

 We   prepare rasam daily  since  we are addict to rasam, daily   a variety  of rasam  will be prepared in  our house. This one is very  easy   and  tasty rasam :


 Ingredients :
Tamarind   -   1  small gooseberry size
Tomato - 1 
Rasa powder / sambar powder   - 1/2 tsp
 Salt - to taste
 hing  -little
Thur dal  - 1 tsp
 Garlic  - 2 pods (optional)
 Curry leaves, coriander leaves-  for garnishing
Red chillies  - 2
 Tempering :
 Kadugu - 1 tsp
 Method:
  In a vessel  pour the tamarind juice , add the  cut tomato, salt , rasam powder , hing, thur dal ( as it is -- not cooked  dal  ) , garlic ( optional ) and  cook  till the  raw smell of tamarind, rasam powder  vanishes .Add the required water   and allow to froth the rasam.Temper the kadugu , red chillies , curry leaves in ghee , Garnish with fresh  coriander leaves . This is  easy  and quick,  tasty rasam .










Lemon Rasam .


This is a  tangy , enjoyable rasam , you can drink as soup too. Whenever  we get fresh lemon , we   prepare lemon rice, lemon rasam , lemon juice ,,,,  wow   this  has   good medicinal property too .
Ingredients :
 Thur dal  - 1/4 cup
 Salt - to taste
 Tomato - 1
Lemon - 1
Hing-  1/2 tsp
Pepper-  1/4 tsp
Jeeragam - 1/4 tsp
Ginger -  a small piece
Green chilly -1,
Turmeric powder - 1/2 tsp
For tempering - ghee- 1 tsp, kadugu - 1/2 tsp

 Cook the dal , mash it and keep it aside,
In a vessel take   1 1/2 cup of water add chopped tomato, ginger, turmeric powder, salt  allow to boil for   10  minutes , then add the cooked , mashed  dal , add   1/2  a cup of water ,add pepper, jeera allow to froth . Then add the  tadka, , then add the  lemon juice and garnish with fresh coriander leaves, curry leaves , Yummy lemon rasam is ready







poricha rasam ( no tamarind rasam )

Our  favourite rasam ,  prepared  without tamarind, sometimes  doctors   advised  not to use tamarind during the medications , At that we use  poricha koottus , poricha rasam  for paththiyam . Even  after delivery also we use very  less ( some times   we use  roast  little tamarind   and use it / without tamarind  we use)
 Ingredients:
 Thur dal  -  2 tsp s( cook it in water and mash it)
 Tomato  - 1
 Salt  - to taste
 Rasam powder  - 1 tsp
 Hing   - little
Temper:
Kadugu  - 1 tsp
 Curry leaves, coriander leaves - for garnishing 




 Method :
 Cook the dal and mash it , keep it . In another vessel add water , tomato  cook it for 5 mins, then  remove the tomato , remove the skin and  mash it  add  2 cups of water , rasam powder , salt , hing  and boil it  for  10 minutes , then add the dal water cook for 2 minutes  and add the required  water and allow to froth . Then  temper kadugu  in ghee  add to the rasam , garnish with curry leaves, coriander leaves  and enjoy the poricha rasam with hot rice.

paruppu rasam

தேவையான பொருட்கள் :
----------------------------
துவரம் பருப்பு - 50கிராம்
ரசப்பொடி - 1 ஸ்பூன்
 புளி -2 கொட்டை பாக்கு அளவு         
தக்காளி பழம் -1 சிறியது
உப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயம் -1 துண்டு
கடுகு -1/4 ஸ்பூன் (தாளிக்க)
கொத்துமல்லி ,கருவேப்பிலை (அலங்கரிக்க)



முதலில் பருப்பை வேகவிட்டு நன்றாக குழைய வேகவைத்து கொள்ளவும்.புளியை ஊறவைத்து 200 கிராம் அளவு எடுத்து கொண்டு அதில் உப்பு ,பெருங்காயம்,நறுக்கிய தக்காளி ,ரசப்பொடி,இவற்றை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.சுமார் 8 நிமிடங்கள் நன்கு கொதித்ததும் வேக வைத்த பருப்பு தண்ணீருடன் சேர்த்து வேண்டிய அளவுக்கு தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்ததும் இறக்கி கருவேப்பிலை ,கொத்துமல்லி போட்டு அலங்கரித்து கடுகு தாளிக்கவும்  (நெய்யில் -optional )(சீரகமும் சேர்க்கலாம் -optional -வாசனையாக இருக்கும் )

Saturday, October 27, 2012

காரட் ஹல்வா :::
தேவையான பொருட்கள்
காரட் --3 கப்
  பால் --    1  1 /2 கப்
ச ர்க்கரை - 1     கப்
நெய் -  3  டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் ..சிறிதளவு
முந்திரி -சிறிதளவு
 ஒரு அடி கனமான வாணலியில் துருவிய காரட்டை சிறிது நெய் விட்டு வதக்கி ,அதனுடன் பால் சேர்த்து வேகவிடவும் .நன்றாக வெந்து பால் சுண்டியதும்  சர்க்கரை
சேர்க்கவும் கை விடாமல் கிளறவும் ,கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு கிளறவும் .நன்றாக சேர்ந்து வந்ததும் , நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்    











 

Friday, October 26, 2012

பூசணிக்காய் ஹல்வா :

அடுத்து ஒரு இனிப்பு ....  பூசணிக்காய் ஹல்வா :
கல்யாணங்களில் மாப்பிள்ளை அழைப்பு  அன்று மாலை சிற்றுண்டிக்கு அநேகமாக பூசனிக்காய் ஹல்வா தான் போடுவார்கள்:
நாமும் இதை ஈசியாக வீட்டில் செய்யலாம் ;
வெள்ளை பூசணிக்காய் வாங்கி நன்றாக சுத்தம் செய்து,தோலி,நடுவில் உள்ள பாகத்தையும் நறுக்கி விட்டு கெட்டியான சதை பகுதியை காரட்   துருவலில்

துருவி நன்றாக பிழிந்து தண்ணீரை வடிகட்டி  விடவும்
.
வாணலியை அடுப்பில் ஏற்றி இரண்டு/மூன்று தேக்கரண்டி நெய் விட்டு பிழிந்த பூசணிக்காயை போட்டு வதக்கவும்.
நன்றாக வதகியதும் ,தண்ணீர் சுண்டியதும் விழுதுக்கு முக்கால் அளவு சக்கரை + பாதி அளவு பால் சேர்த்து வேக விடவும்,சேர்ந்து வெந்ததும் கொஞ்சம் கேசரி பவுடர்,ஏலக்காய்  பவுடர் சேர்த்து
கிளறி வாணலியில் ஒட்டாமல் வந்ததும் வாணலியில் இருந்து இறக்கிவிடவும்,இது தளதளவென்றிருக்க வேண்டும் .கெட்டி ஆகக்கூடாது.
சூப்பர் பூசணிக்காய் ஹல்வா ரெடி ,